Monday, 16 January 2023

 

கடவுளை கண்டேன் என்று சொல்வதெல்லாம் பொய்.

காற்றுதான் தகப்பன். தண்ணீர்தான் தாய். இந்த இரண்டில் இருந்து உருவானதுதான் நெருப்பு. அல்லது ஜோதி என்பது.

காற்றிலும் இந்த மூன்றும் உண்டு.  நீரிலும், நெருப்பிலும் இந்த மூன்றும் உண்டு. ஆணிடமும், பெண்ணிடமும் இந்த மூன்றும் உண்டு. சகல ஜீவனிடமும் இந்த மூன்றும் உண்டு.

ஒரு நாளைக்கு பகல் 12  விதமாகவும் இரவு 12 விதமாகவும் இருக்கிறது.

நல்லது கெட்டது கலந்து ஒரு நாளைக்கு உண்டாக்கப்பட்டது.

ஒரு தாய் வயிற்றில் நான்கு குழந்தை பிறந்தது, நான்கும் சமமாக இல்லாததன் காரணம் என்ன? தாயின் வயிற்றில் கரு உருவாகும் நேரம் காலம் முதலியவற்றை பொருத்து பிரம்மா இவற்றை நிர்ணயிக்கிறார்.

மந்திரம் என்றோ, தவம் என்றோ ஜெபம் என்றோ சொல்லி கடவுளை பார்ப்பது அரிது. கடவுளை நேரில் கண்டேன் என்று சொல்வது பொய்.

தாயினுடைய பொருளை மதிப்பிடலாம். அளவிடலாம். ஆனால் தந்தையின்  மதிப்பை அளவிடமுடியாது. இது மட்டும் எப்படி என்று என்று கேட்கலாம். தண்ணீர் தாய் என்று சொல்கிறோம். அதை பாத்திரத்தில் ஊற்றி அளவிடலாம். ஆனால் காற்றை யாராலும் அளவிட்டு பார்க்க முடியாது.

No comments:

Post a Comment